திருடி மூன்று நிமிடத்தில் மீண்டும் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலை!
கொட்டகலை பகுதியில் வீடு ஒன்றில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயத்திலிருந்த பிள்ளையார் சிலை ஒன்று திருடப்பட்டு மூன்று நிமிடத்தில் மீண்டும் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளதாக பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
வீட்டின் முன்புறம் இருந்த பிள்ளையார் சிலையினை காலையில் பார்க்கும் போது அது இருந்த இடத்திலிருந்து வேறொரு இடத்தில் இருப்பதனை கண்டு வீட்டில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கமராவினை பரிசோதித்துள்ளனர்.
இதன்போது நபரொருவர் சொகுசு கார் ஒன்றில் அதிகாலை 5.27 மணியளவில் வந்து பிள்ளையார் சிலையினை திருடி செல்வதும் அதனை மூன்று நிமிடத்தில் மீண்டும் கொண்டு வந்து வைப்பதும் கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.
இதேவேளை முன்னர் தனது வீட்டருகில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாகவும் அது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்த போதும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.