மாட்டுத் திருடன் கைது

மாட்டுத் திருடன் கைது

கோப்பாய் பொலிஸ் பிரிவில் நீண்ட காலமாக மாடுகளை திருடியவர் கையும் மெய்யுமாக பிடிபட்டார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியன்காடு மடத்தடி இருபாலைப்பகுதிகளில் நீண்ட காலமாக மாடுகளை திருடி விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் இன்றைய தினம் கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருபாலை பகுதியில் மாடு ஒன்றினை திருடி அதனை விற்பனை செய்ய முயன்ற போது மாட்டு உரிமையாளரால் திருடப்பட்ட மாடு இனங்காணப்பட்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கல்வியங் காட்டு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் எனவும் குறித்த நபர் நீண்ட காலமாக மாடுகளை திருடி விற்பனை செய்து வந்த நபர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.