ஸ்ரீலங்காவில் கோழி முட்டையின் விலை அதிகரிப்பு?

ஸ்ரீலங்காவில் கோழி முட்டையின் விலை அதிகரிப்பு?

கோழிகளுக்கான தீனிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் நாட்களில் கோழி முட்டையின் விலை அதிகரிக்கும் என கோழி முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் துமிஷ்க சுபசிங்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

கோழிகளுக்கு தீனியாக வழங்க சோளம் தேவை என்ற போதிலும் அரசாங்கம் மாற்று உணவாக ஒரு லட்சத்து 80 ஆயிரம் டொன் கோதுமை அரிசியை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

எனினும் கோதுமை அரிசி கோழி தீனிக்கு மாற்றான ஒன்றல்ல எனவும் இதன் காரணமாக மாற்று தீனிகளை வழங்கி வருவதால், பெரிய நிதி செலவு ஏற்பட்டுள்ளது.

கோழி முட்டை ஒன்று தற்போது சில்லறை விலையாக 23 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. நஷ்டமின்றி முட்டைகளை விற்பனை செய்ய வேண்டுமாயின் ஒரு முட்டையை 20 ரூபா மொத்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.