உறவினர் வீட்டுக்கு சென்றவர் சடலமாக மீட்பு!
மத்தேகொட - சமகி உயன பிரதேசத்தில் மூன்று மாடி கட்டிடமொன்றில் இருந்து குதித்து நபரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், உறவினர் ஒருவரின் வீடொன்றுக்கு சென்று, உறவினர்களுடன் மேல் மாடியில் வைத்து பேசிக் கொண்டிருந்த போது திடீரென குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
இதேவேளை குறித்த நபர் மன நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் என தெரியவந்துள்ளதுடன் மத்தேகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.