யாழ். நுணாவில் பகுதியில் மோதல்! பெண் உட்பட நால்வருக்கு ஏற்பட்ட நிலை
யாழ்ப்பாணம் – நுணாவில் பகுதியில் இரு அரசியல் கட்சி ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேர்தல் பிரசார சுவரொட்டி ஒட்டுதலை அடிப்படையாகக் கொண்டு இரவு 11.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த நால்வரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்களும் இதன்போது சேதமாக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன