நெல் உமி மூடையில் கசிப்பு - மூவர் கைது

நெல் உமி மூடையில் கசிப்பு - மூவர் கைது

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தனியார் பேருந்தில் நூதனமான முறையில் மறைத்து கொண்டுவரப்பட்ட கசிப்பு நேற்று (04) கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் பொலிசாரால் அரியாலை மாம்பழம் சந்தியில் வைத்து கசிப்பு கைப்பற்றப்பட்டதுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல் உமி மூடையில் நூதனமாக மறைத்து கொண்டு வரப்பட்ட கசிப்பே இவ்வாறு கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களும் சான்றுப் பொருட்களையும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.