3 நாட்களில் 100க்கும் அதிகமான தொடரூந்து பயணங்கள் ரத்து
இன்று (3) காலை 12 தொடரூந்து பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் 10 அலுவலக தொடரூந்துகளும் உள்ளதாக தொடரூந்து நிலைய அதிபர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 3 நாட்களில் 100 இற்கும் மேற்பட்ட தொடரூந்து பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், 500 இற்கும் மேற்பட்ட சேவையாளர்கள் ஓய்வு பெற்றதால், தொடரூந்துகளை இயக்குவதற்கு மேலும் தடைகள் ஏற்பட்டுள்ளதாக தொடரூந்து நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026