யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம்

யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம்

யாழ்.பருத்தித்துறை பகுதியில், மூன்று வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குழந்தையின் தந்தை கைதாகியுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 10ஆம் திகதி பதிவாகியுள்ளது.

 

மது போதையில் வீட்டுக்கு வந்த தந்தை குழந்தையை வன்புணர்ந்ததாக தாயார் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தந்தை கைது

யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம் | Three Year Old Child Brutalized Father In Jaffna

பரிசோதனையின் போது, குழந்தை வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் பாவனை

 

சந்தேகநபர் கஞ்சா மற்றும் கசிப்பு போன்ற போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் பணத்திற்காக தனது மனைவியை பிறருடன் தகாத உறவில் ஈடுபடுமாறும் கட்டாயப்படுத்தி வந்துள்ளார் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம் | Three Year Old Child Brutalized Father In Jaffna

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.