அக்காவின் கையில் இருந்து தவறி விழுந்த குழந்தை! கண்டி வைத்தியசாலைக்கு மாற்றம்

அக்காவின் கையில் இருந்து தவறி விழுந்த குழந்தை! கண்டி வைத்தியசாலைக்கு மாற்றம்

அக்காவின் கையில் இருந்து தவறி விழுந்த 18 மாத குழந்தை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் இதனை தெரிவித்தார். இச்சம்பவம் இன்று மாலை கிண்ணியா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கிண்ணியா-சூரங்கள் பகுதியைச் சேர்ந்த பாத்திமா நசீமா என்ற 18 மாத குழந்தைக்கே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

18 மாத குழந்தை, தன்னுடைய 12 வயது அக்கா தூக்கி விளையாடிய போது தவறுதலாக கீழே விழுந்து மயக்கமுற்ற நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

இதனையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அக்குழந்தையின் தலையில் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு இன்று இரவு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.