கந்தகாடு பாதுகாப்பு அதிகாரியின் முழுக் குடும்பத்திற்கும் கொரோனா தொற்று
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள் நால்வர் இன்று மாலை 5.00 மணியளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் சேவை செய்யும் பாதுகாப்பு பிரிவு அதிகாரியுடன் தொடர்புடைய நால்வராகும்.
குறித்த பாதுகாப்பு அதிகாரி ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்தவராகும். அவரது தாயார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதென ஹோமாகம மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
அவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானவர் ஹோமாகம பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் சேவை செய்யும் அதிகாரி எனவும் அவருடன் சேவை செய்த அதிகாரிகள் 31 பேர் தற்போது சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான நால்வரும் அந்த பாதுகாப்பு பிரிவு அதிகாரியின் தந்தை, சகோரர்கள் இருவரும் பாட்டி என குறிப்பிடப்படுகின்றது.
குறித்த இராணுவ அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து வீட்டில் இருந்த 6 பேரும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.