தனியார்துறை ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் தொழில் திணைக்களம் கூறியது!
கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக 50 சத வீதம் அல்லது ஆகக் குறைந்தது 14 500 ரூபா சம்பளத்தை மாதாந்தம் தங்களது ஊழியர்களுக்கு வழங்குவதற்கு தனியார் துறையினருக்கு செப்டம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டமையானது வீடுகளிலிருந்து வேலை செய்பவர்களுக்கு மாத்திரமே என தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்.பி.ஏ.விமலவீர தெரிவித்துள்ளார்..
எனவே முழுமையாகத் திறக்கப்பட்டுள்ள தனியார் தொழிற்சாலைகளில் அல்லது நிறுவனங்களில் வந்து தொழில்புரிவோருக்கு முழுமையான சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.