யாழில் மீண்டும் வாள்வெட்டு!

யாழில் மீண்டும் வாள்வெட்டு!

யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரியாலை தபால்கட்டை சந்தியில்  (10) மதிய வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவ்வழியே வந்த வரை, குடைக்குள் மறைத்து வைத்திருந்த வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.