தொற்றுநோய் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இருந்து விலகும் பொது சுகாதார பரிசோதகர்கள்..!

தொற்றுநோய் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இருந்து விலகும் பொது சுகாதார பரிசோதகர்கள்..!

கொரோனா வைரஸ் தொற்று உள்ளிட்ட அனைத்து தொற்று நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இருந்தும் நாளை முதல் விலகுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று கடவத்தையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

கொரோனா உள்ளிட்ட அனைத்து தொற்று நோய்களையும் கட்டுப்படுத்தும் வகையில் சட்ட அதிகாரங்கள் நிறுவப்பட வேண்டுமெனவும் அவர்கள் இதன்போது வலியுறுத்தியிருந்தனர்.

சட்ட பாதுகாப்பு இல்லாமல் தனது கடமைகளைச் செய்ய இயலாமையின் அடிப்படையில் தொழிற்சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக குறித்த சங்கம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் தங்கள் கடமைகளைச் செய்ய பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அதிகாரம் இல்லை என்று சுகாதார அமைச்சர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.