
கட்டடப் பணியாளர் ஒருவர் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வீதியில் உள்ள கட்டடத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார் புலன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இன்று காலை சம்பவ இடத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருநெல்வேலியைச் சேர்ந்த 32 வயதுடைய கட்டடப் பணியாளரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என்று ஆரம்ப விசாரணைகளின் பின் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேர் பொலிஸ் விசாரணையில் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.