மனைவி சம்மதத்துடன் காதலியுடன் திருமணம்.. 2 மனைவிகளின் டார்ச்சரால் வாலிபர் எடுத்த அதிர்ச்சி முடிவு!

மனைவி சம்மதத்துடன் காதலியுடன் திருமணம்.. 2 மனைவிகளின் டார்ச்சரால் வாலிபர் எடுத்த அதிர்ச்சி முடிவு!

மனைவி சம்மதத்துடன் தான் காதலித்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்த வாலிபர் ஒருவர் எடுத்த அதிரடி முடிவால் இரண்டு மனைவிகளும் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர்.

திருப்பதியைச் சேர்ந்த கல்யாண் சமூகவலைதளத்தில் பிரபலமாக இருந்த நிலையில் நித்யஸ்ரீ என்ற பெண்ணுடன் அறிமுகமானார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்த நிலையில் திடீரென இவர்களது உறவு நின்று போனது.

இந்த நிலையில் கல்யாண், தன்னுடைய பெற்றோர் பார்த்த விமலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சில மாதங்கள் கழித்து, கல்யாண் மனைவி விமலாவை சந்தித்த அவரது முன்னாள் காதலி நித்யஸ்ரீ , தன்னால் கல்யாண் இல்லாமல் இருக்க முடியாது என்றும் உங்கள் கணவரை எனக்கு இரண்டாவதாக திருமணம் செய்து வையுங்கள் என்றும் கதறி அழுதுள்ளார்.நித்யஸ்ரீயின் கண்ணீரைப் பார்த்து இரக்கம் அடைந்த விமலா தனது கணவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். அவரே முன்னின்று கல்யாண் மற்றும் நித்யஸ்ரீ திருமணத்தை நடத்தி வைத்தார்.

இந்நிலையில் திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் திடீரென கல்யாண் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. திருமணமான ஒருசில நாட்களில் நித்யஸ்ரீ மற்றும் விமலா ஆகிய இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதை அடுத்து இரண்டு பேரும் சேர்ந்து கணவர் கல்யாணுக்கு டார்ச்சர் கொடுத்து உள்ளதாக தெரிகிறது. இரண்டு மனைவிகளின் டார்ச்சர் தாங்க முடியாமல் கல்யாண தலைமறைவாக இருப்பதாகவும் அவரை அவரது குடும்பத்தினர் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.