இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 11 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொவிட் 19 தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது.


இதேவேளை, நாட்டில் ஆறு பேருக்கு இன்று கொரோனா தொற்றுறுதியானது.

அவர்கள் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுறுதியானவர்களுடன் தொடர்பை பேணிய ஹோமாகமையை சேர்ந்த நான்கு பேருக்கும், பிலிப்பைன்ஸில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 703 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் 668 பேர் நாடளாவிய ரீதியி;ல் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கதிர்காமத்திற்கு யாத்திரரை மேற்கொண்டிருந்த ஒருவருக்கு அண்மையில் கொவிட் 19 தொற்றுறுதியானது.

இதனையடுத்து அவருடன் சென்றிருந்த 6 பேர் பயணித்த இடங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவர்களுடன் தொடர்பை பேணிய 18 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் தேரர் ஒருவரும் அடங்குவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன