பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான விசேட செய்தி...! (காணொளி)

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான விசேட செய்தி...! (காணொளி)

பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற்கொண்டு வழங்கப்பட்டுள்ள மேலதிக விடுமுறை காலம் மேலும் ஒருவாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்தப்படும் தினம் தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜாங்கனை மற்றும் வெலிக்கந்தை கல்வி வலயத்தில் உள்ள எந்தவொரு பாடசாலையும் ஒக்ஸ்ட் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் திறக்கப்படமாட்டாது என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற்கொண்டு வழங்கப்பட்ட ஒருவார கால விடுமுறைக்கு அமைய நாளை மறுதினம் பாடசாலைகள் திறக்கப்படவிருந்தன.

இந்த நிலையில் எதிர்வரும் 27 ஆம் திகதி பாடசாலைகளை மீள திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தினத்தில் தரம் 11,12 மற்றும் 13ஆம் தர மாணவர்களுக்காக மாத்திரமே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.