'எல்ல ஒடிஸி' இன்று முதல் வியாழன் - வெள்ளிக்கிழமைகளிலும்

'எல்ல ஒடிஸி' இன்று முதல் வியாழன் - வெள்ளிக்கிழமைகளிலும்

கொழும்புக்கும் பதுளைக்கும் இடையில் இயங்கும் எல்ல 'ஒடிஸி' அதி சொகுசு தொடருந்து இன்று (8) முதல் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.

பயணிகளின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து பிரதி பொது முகாமையாளர் வி.எஸ். பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

சுற்றுலா பயணிகளுக்கென பிரத்தியேகமாக முன்னெடுக்கும் இந்த தொடருந்து சேவை கடந்த மாதம் முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் சேவையில் ஈடுபட்டிருந்தது.