11ஆம் வகுப்பு மாணவி கர்ப்பத்திற்கு 10ஆம் வகுப்பு மாணவர் காரணமா? புதரில் வீசப்பட்ட குழந்தை!

11ஆம் வகுப்பு மாணவி கர்ப்பத்திற்கு 10ஆம் வகுப்பு மாணவர் காரணமா? புதரில் வீசப்பட்ட குழந்தை!

11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கர்ப்பம் ஆனதற்கு 10ஆம் வகுப்பு மாணவர் காரணம் என்ற நிலையில் மாணவி கழிவறையில் குழந்தை பெற்று அந்த குழந்தையை புதரில் வீசியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் புவனகிரி என்ற பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் அருகே ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் புதரில் இறந்து கிடப்பதை கண்டு மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தலைமை ஆசிரியர் புவனகிரி காவல்துறைக்கு புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் விரைந்து விசாரணை மேற்கொண்டு குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அந்த குழந்தை அந்த பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பிறந்ததாகவும், அந்த குழந்தைக்கு அதே பள்ளியில் படித்துவரும் 10ஆம் வகுப்பு மாணவர் தான் காரணம் என்றும் தெரியவந்தது.

இதனை அடுத்து குழந்தை பெற்ற மாணவியை மருத்துவமனையில் அனுமதித்த காவல்துறையினர் மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான மாணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

10ஆம் வகுப்பு படிக்கும் மாணவருடன் பழகி 11ஆம் வகுப்பு மாணவி கர்ப்பமாகி குழந்தை பெற்று அந்த குழந்தையை புதரில் வீசி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.