துப்புரவு பணியாளருக்கு எதிராக யாழ் மாநகர சபை நடவடிக்கை
மதுபோதையில் நின்று பணிசெய்த துப்புரவு பணியாளருக்கு எதிராக நடவடிக்கை எடுத்த யாழ் மாநகர சபை உறுப்பினர் மற்றும் மேற்பார்வையாளர் மீது தாக்குதல் மற்றும் அச்சுறுத்தும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
நல்லூர் ஆலய உற்சவம் இடம்பெற்றுவரும் நிலையில் இன்று (20) அதிகாலை துப்பரவு பணியில் ஈடுபட்ட ஊழியர் மதுபோதையில் நிற்பதை அவதானித்த யாழ் மாநகர சபை உறுப்பினர், குறித்த துப்புரவு பணியாளரை நாளைய தினம் வந்து கடமையில் ஈடுபடுமாறும் மதுபோதையில் இருந்து பணியில் ஈடுபடவேண்டாம் எனவும் கூறுமாறு மேற்பார்வையாளருக்கு அறிவுறுத்தினார்.
இந்நிலையில் குறித்த துப்புரவு பணியாளர் மதுபோதையில் பணியில் ஈடுபட முடியாது என மேற்பார்வையாளர் கூறிய நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குறித்த பணியாளர் மாநகர சபை உறுப்பினர் மற்றும் மேற்பார்வையாளரை அச்சுறுத்தும் தாக்குதல் முயற்சியிலும் ஈடுபட்டார்.
இதனையடுத்து குறித்த துப்புரவு பணியாளருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ள யாழ் மாநகர சபை குறித்த பணியாளரை பணியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.