யாழில் கள்ளச்சந்தையில் 3௦௦௦ ரூபாவில் இருந்து 5௦௦௦ ஐ தொட்ட்து பெற்றோல் வியாபாரம்!

யாழில் கள்ளச்சந்தையில் 3௦௦௦ ரூபாவில் இருந்து 5௦௦௦ ஐ தொட்ட்து பெற்றோல் வியாபாரம்!

யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து நாவலர் வீதிக்கு செல்வதற்கு ஆட்டோக்கு 1500 ரூபாய். ஏன் அண்ண. இப்படி? இல்லை நாங்கள் 3000 க்கும் பிளக்கில பெற்றோல் வாங்கி ஓடுறம்.

யாரைக் கேட்டாலும் இதே கதைதான். அப்ப லைனில நின்று பெற்றோல் அடிக்கிற ஆட்டோக்கள் எல்லாம் எங்க? அவசியமானவர்களுக்கு பெற்றோல் இல்லாமல், பிளக்கில விற்கிறவனுக்கு எப்படி பெற்றோல் கிடைக்குது? அவன் எப்படிப் பெறுகின்றான்?

இப்ப பெற்றோல் செற் ஒரு பிரபல, சூதாட்ட இடமாக மாறிட்டு. லைனில நிற்கிற ஆட்கள் வியாபாரம். 50 தொடக்கம் 100 பேருக்குள்ள லைனில நிற்கிற இடம் வேண்டும் என்றா 3000 ரூபாய். அதுக்கு மேல இருக்கிற இடத்தில இடையில களவாக பைக் செருக 1500 என்று நல்ல பிஸ்னஸ் போகுது.

இதற்காக நாள் கணக்கில் அங்கணக்க காத்திருந்து பெற்றோல் அடிக்கிற கும்பல் ஒரு பக்கம். அதனை கள்ளச் சந்தையில் விற்கிற கும்பல் ஒரு பக்கம். ஒருத்தன் பெற்றோல் அடிச்சிட்டு, வீட்ட போகாம, திரும்ப லைனில வந்து நிற்கின்றான். முதல் அடிச்ச பெற்றோல் கள்ளச் சந்தையில 5000 ரூபா வரையில் விற்றுவிட்டு மீண்டும் வியாபாரத்துக்கு கொள்முதல். இதனை இவர்கள் சுழற்சி வியாபாரமாக மாற்றி விட்டனர்.

இதில என்ன கொடுமையென்றால், இஞ்சின் இல்லாத பைக்குகள், கராச் வழிய ஓடவே முடியாது என்று விட்ட பைக்குகள் எல்லாம் லைனில கொண்டு வந்து நிற்பாட்டி இருக்கு. பெற்றோல் நிரப்பி விற்க.

அண்மையில் குளப்பிட்டிச் சந்தியில் அத்தியாவசியத் தேவைக்கு பெற்றோல் அடிச்ச நேரம், சிலருக்கு தேவைக்கு மேலதிகமாக அடிபட்டு இருக்கு போல. கூடுதலா வாங்கின அந்தப் பெண் உத்தியோகத்தர், கொஞ்சம் தள்ளி வந்து கள்ளச்சந்தை விலைக்கு அதனை விற்றிருக்கின்றார். அவாவுக்கு அடிச்ச மேலதிக பெற்றோல், இனியின்றி தேவையுள்ள ஒருவனுக்கு இல்லாமல் போகுது.

பெற்றோல் பிரச்சினை தொடங்கி மாசக்கணக்காகி. இப்பத்தான் மாவட்டச் செயலகம் செயலி உருவாக்கி இருக்கு. யாழ்ப்பாணத்தில எத்தனையோ, செயலி உருவாக்கக்கூடிய ஆட்கள் இருக்காங்கள். கேட்டிருந்தா இலவசமா பண்ணி கொடுத்திருப்பாங்கள். இந்த பெற்றோல் கள்ளச்சந்தையை எப்பவோ கட்டுப்படுத்தியிருக்க முடியும்.

பெற்றோல் வழமைக்கு வந்தாலும், இவங்கள் அதனை எப்பயும் தட்டுப்பாடாக வைச்சிருக்கத்தான் பிளான் போடுவாங்கள் பாருங்கோவன்.

இப்படி கள்ளச்சந்தையில் பெற்றோல் விற்பதற்காக லைனில நிற்கும் ஒரு சிவத்தப் பொட்டுக்காரன், சொல்லுறான், நாட்டை கொள்ளையடிச்ச இவன் போ போ என்று சொல்ல, போறான் இல்லையாம் என்று. இப்பவே இவ்வளவு உழைக்கனும் என்று ஆசைப்படுற நீங்கள். அந்தக் கதிரையில உட்கார வைச்சால், உறிஞ்சி குடிச்சிருப்பீங்கள்.