யாழில் ஏற்பட்டுள்ள அபாய நிலை! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள உடனடி அறிவித்தல்

யாழில் ஏற்பட்டுள்ள அபாய நிலை! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள உடனடி அறிவித்தல்

யாழ்.மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக குருதிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது என தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி தெரிவித்துள்ளது.

குறிப்பாக A பொசிட்டிவ் வகை இரத்தத்ததிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது நடமாடும் இரத்ததான முகாம்கள் குறைவடைந்துள்ளதுடன் இரத்த வங்கிகளுக்கு குருதிக் கொடையாளர்கள் நேரடியாக வருகை தந்து குருதிக்கொடை வழங்குவதும் குறைவடைந்துள்ளது.

இதனால் A பொசிடிவ் மாதிரி குருதிக்கு மாத்திரமல்லாமல் ஏனைய குருதி வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாய நிலை காணப்படுகிறது.

இதனால் அவசரமாக இரத்தம் தேவைப்படும் நோயாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A பொசிடிவ் வகை குருதியை உடைய குருதிக் கொடையாளர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைகளின் இரத்த வங்கி பிரிவுகளுக்குச் சென்று குருதி வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி கடந்த வாரத்துக்குப் பின்னர் நடமாடும் இரத்ததான முகாம் எதுவும் நடைபெறவில்லை.

இதன் காரணமாக குருதியின் இருப்பும் குறைந்து செல்கிறது.

தற்போது குருதியின் தேவை அதிகரித்துள்ள நிலையில் பொது அமைப்புகளும், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களும் நடமாடும் இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து நடாத்த முன்வருவதன் மூலம் தட்டுப்பாடு இல்லாமல் குருதியை வழங்க முடியும் என்று அறிவித்துள்ளது.