இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்
பொதுச் சொத்துக்கள் மற்றும் உயிர்கள் சேதங்களை தடுக்க இராணுவ வீரர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்புப் படையினர் அல்லது பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பதற்காக வன்முறையை அதிகரிக்கும் அனைவரும் இதுபோன்ற வன்முறைச் செயல்களில் இருந்து உடனடியாக விலகிக் கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இல்லையெனில், தற்போதுள்ள நிபந்தனைகளுக்கு ஏற்ப பாதுகாப்புப் படையினரின் அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்த நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது.