ரயில், பஸ் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

ரயில், பஸ் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (09) காலை 8 மணிக்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் ரயில் சேவை வழமைக்குத் திரும்பும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் போக்குவரத்து பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன இதனை அறிவித்தார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிபகிஸ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் வழமை போல பஸ் போக்குவரத்து இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.