பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கை வருகிறது: போட்டி அட்டவணை அறிவிப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கை வருகிறது: போட்டி அட்டவணை அறிவிப்பு

டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் குழாம் அடுத்த மாதம் 6 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.

2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிக்கையொன்றை விடுத்து தெரிவித்துள்ளது.

இதன்படி, இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி அடுத்த மாதம் 16 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அத்துடன் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 24 ஆம் திகதி கொழும்பு ஆர் பிரேமதாஸ சர்வதேச விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.