யாழில் மர்மமான முறையில் இளைஞரொருவர் உயிரிழப்பு

யாழில் மர்மமான முறையில் இளைஞரொருவர் உயிரிழப்பு

யாழ். உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றில் இணுவிலைச் சேர்ந்த இளைஞரொருவர் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அடிக்கடி சென்று வரும் நிலையில் நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் போதைவஸ்து பழக்கத்திற்கு அடிமையாகியவர் எனவும், அளவுக்கு அதிகமாக போதை ஊசி ஏற்றிய நிலையில் உயிர் இழந்தாரா? என்ற சந்தேகம் நிலவுவதாக  பிரதேசவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

எனினும் குறித்த நபரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவராத நிலையில் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.