கைவிடப்பட்ட தேயிலை தொழிற்சாலைகளின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்-பிரதமர்

கைவிடப்பட்ட தேயிலை தொழிற்சாலைகளின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்-பிரதமர்

மத்திய மாகாணத்தின் பல பகுதிகளிலும் கைவிடப்பட்டுள்ள தேயிலை தொழிற்சாலைகளின் செயற்பாடகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பினருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

குறித்த மாகாணத்தில்  13 தேயிலை தொழிற்சாலைகளின் செயற்பாடுகளை கைவிடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

மேற்குறிப்பிடப்பட்ட தொழிற்சாலைகளின் செயற்பாடுகளை கைவிடுவதனால், 01 இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்படக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே தான் இதனை கைவிடாமல் தொடர்ந்தும் முன்னெடுத்த செல்லுமாறு பிரதமர் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.