கோண்டாவிலில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை திறந்துவைப்பு

கோண்டாவிலில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை திறந்துவைப்பு

கோண்டாவில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை இன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ல்சால் திறந்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மூலத்தின் 55 மில்லியன் ரூபா செலவில் குறித்த புதிய கட்டடம் கட்டப்பட்டது.

இந்த நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ஜெயகுமாரன்,தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண சபையின் பிரதமர் செயலாளர் பத்திநாதன், வடமாகாண சபை சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.