சட்டவிரோதமாக சமையல் எரிவாயுக்களை விற்பனை செய்த சந்தேகநபர் கைது

சட்டவிரோதமாக சமையல் எரிவாயுக்களை விற்பனை செய்த சந்தேகநபர் கைது

சட்டவிரோதமாக சமையல் எரிவாயுக்களை விற்பனை செய்து வந்த சந்தேகநபர் ஒருவர் கொலன்னாவை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயு ஒன்றை 9,920 ரூபாவுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் இருந்து 40 சமையல் எரிவாயுக்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.