சபுகஸ்கந்தவில் 450 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

சபுகஸ்கந்தவில் 450 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சபுகஸ்கந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் பாரவூர்தி ஒன்றில் இருந்து 450 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி சுமார் 45 மில்லியன் ரூபா என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் 2 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.