யாழ் சாவகச்சேரி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றில் ஹெரோயின் போதைப் பொருளை கொண்டு செல்ல முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலால்வரி திணைக்கள அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்
சாவகச்சேரி மதுவரி நிலைய அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளர்
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 1 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதிமிக்க ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேகநபரை சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.