மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததில் ஒருவர் பலி
யாழ்ப்பாணம் கொடிகாமம் - பருத்தித்துறை வீதீயில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி துன்னாலை பகுதியை சேர்ந்த அருந்தவராசா அஜந்தன் வயது 27 என்பவரே உயிரிழந்துள்ளார்.
வரணி பகுதியில் இருந்து மந்திகை நோக்கி, கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை, மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக நின்ற மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025