பாண் இறாத்தல் ஒன்றின் விலை 30 ரூபாவால் உயர்வு

பாண் இறாத்தல் ஒன்றின் விலை 30 ரூபாவால் உயர்வு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 450 கிராம் நிறைக்கொண்ட பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே. ஜயவர்தன இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை ப்றீமா நிறுவனம் 40 ரூபாவினாலும், செரண்டிப் நிறுவனம் 35 ரூபாவினாலும் அதிகரித்துள்ளன.