யாழ் வீதிகளில் பயணிக்கும் பெண்களுக்கு பொலிஸாரின் அறிவிப்பு!

யாழ் வீதிகளில் பயணிக்கும் பெண்களுக்கு பொலிஸாரின் அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் தங்க நகைகளை அதிகளவில் அணிந்து செல்வதை தவிர்க்குமாறு யாழ்  மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி நிகால் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் பல்வேறு கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கைது செய்தமை தொடர்பாக  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “யாழ்ப்பாண குடாநாட்டில் அண்மைய நாட்களில் வீதிகளில் செல்லும் பெண்களிடம் நகைகள் கொள்ளையிடும் சம்பவம் அதிகளவில் இடம் பெற்று வருகின்றது இது தொடர்பான முறைப்பாடுகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பொதுமக்களினால் பதியப்பட்டுள்ளன.

அவை தொடர்பில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் இன்றும் பாரிய கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்

மக்களுக்கு நான் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன் யாழ்ப்பாண குடாநாட்டில் வீதிகளில் பயணிக்கும்  பெண்கள் தங்க நகைகளை அதிகளவில் அணியாது செல்வதன் மூலம் திருட்டு செயல்களை கட்டுப்படுத்த முடியும் எனினும் பொலிசாரினால் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் நாளாந்தம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட வருகின்றார்கள் எனவே இது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் “ என்றார்.