டுவிட்டர் வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்த எலான் மஸ்க்

டுவிட்டர் வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்த எலான் மஸ்க்

எலான் மஸ்கின் இந்த அறிவிப்புக்கு பிறகு, டுவிட்டரின் பங்கு 18 சதவீதம் சரிந்தது. மற்றும் டுவிட்டர் ஒப்பந்தத்திற்கு நிதியளிக்க எலான் மஸ்க் முன்மொழிந்த டெஸ்லா 5 சதவீதம் உயர்ந்துள்ளது.

 

உலகின் முன்னணி கோடீஸ்வரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்தார். அதற்கான பணியையும் அவர் மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், டுவிட்டர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

 


டுவிட்டரில் போலி கணக்குகள் குறித்த விவரங்கள் நிலுவையில் இருப்பதால், இந்நிறுவனத்தை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், போலி கணக்கு பிரச்சினை டுவிட்டர் ஒப்பந்தத்தைத் தடுக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், எலான் மஸ்கின் இந்த அறிவிப்புக்கு பிறகு, டுவிட்டரின் பங்கு 18 சதவீதம் சரிந்துள்ளது. டுவிட்டர் ஒப்பந்தத்திற்கு நிதியளிக்க எலான் மஸ்க் முன்மொழிந்த டெஸ்லா 5 சதவீதம் உயர்ந்துள்ளது.