
கொழும்பில் ATM பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஏடிஎம் மையங்களுக்கு அருகில் மக்களை ஏமாற்றி ஏடிஎம் அட்டைகள் மூலம் 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு எதிராக 9 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரிடமிருந்து சிறியளவு ஐஸ் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மோதரை குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழு, சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
இதன்போது, சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்ததை கண்டுபிடித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட பின்னர் விசாரணையின் போது மோசடி தொடர்பான தகவல்கள் தொடர்பில் தெரியவந்துள்ளது.