
மல்லாகத்தில் 22 வயதுடைய இளைஞன் கைது!
யாழ்ப்பாணத்தில் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதையூட்டும் 300 மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மல்லாகம் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தெல்லிப்பழை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞனை கைது செய்த பொலிஸார், அவரது உடைமையில் இருந்து போதை பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.