
தேசபந்து தென்னகோன் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு!
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று முற்பகல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
காலிமுகத்திடல் மற்றும் நாட்டின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு நீதியை நிலைநாட்ட தவறியமை தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்கிறது.
இந்தநிலையில் இன்றைய தினம் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதன்படி, அவர் இன்று முற்பகல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையானார்.