ஊரடங்கு சட்டத்தை பொறுத்து மின் வெட்டு இடம்பெறும்

ஊரடங்கு சட்டத்தை பொறுத்து மின் வெட்டு இடம்பெறும்

நாளை (13) மற்றும் நாளை மறுதினம் (14) ஆகிய இரு தினங்களில் மின் வெட்டு இடம்பெறும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி அடுத்த இரு நாட்களிலும் 3 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின் வெட்டு இடம்பெறும் எனவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டால், அந்த இரு நாட்களில் 5 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நீடிக்கப்படலாம் எனவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.