அமைதி காக்குமாறு பிரதமர் மஹிந்த வேண்டுகோள்!

அமைதி காக்குமாறு பிரதமர் மஹிந்த வேண்டுகோள்!

தற்போதைய மோதல் நிலைமை குறித்து பிரதமர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

இன்று காலை அலரிமாளிகைக்கு வந்து அமைதியான முறையில் கலைந்து சென்ற மக்கள் மத்தியில் திரண்ட ஒரு குழுவினரால் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் பதற்றமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகம், கருத்துகளுக்கு மதிப்பளித்தல் என்பனவே எனது கொள்கையே தவிர வன்முறை என்பதல்ல.

எனவே, இத்தருணத்தில் எந்தவித மோதலிலும் ஈடுபடாமல், நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு காவல்துறையினருக்கு உதவுமாறும், பொறுப்புடன் செயற்படுமாறும் மக்களை கேட்டுக்கொள்கின்றேன் என தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.