முனங்கல் சத்தம் கேட்டது...நள்ளிரவில் சித்ரா இறப்புக்கு முன் ஹோட்டலில் என்ன நடந்தது? பகீர் கிளப்பும் ஹேம்நாத்

முனங்கல் சத்தம் கேட்டது...நள்ளிரவில் சித்ரா இறப்புக்கு முன் ஹோட்டலில் என்ன நடந்தது? பகீர் கிளப்பும் ஹேம்நாத்

சித்ரா இறப்பதற்கு முன் நடந்ததை குறித்து முதன் முறையாக பேட்டியில் மனம் திறந்த சித்ரா கணவர் ஹேமநாத்தின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சித்ரா தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் அவர் கணவர் ஹேமநாத் தான் என்று சித்ராவின் பெற்றோர்கள் புகார் அளித்து இருந்ததால் ஹேம்நாத்தை போலீஸ் கைது செய்து விசாரித்து இருந்தது.

அதன் பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த நிலையில் ஹேம்நாத் முதல் முறை பேட்டி கொடுத்திருக்கின்றார்.

இப்படி ஒரு சூழ்நிலையில் சித்ரா மரணத்திற்கு அரசியல்வாதிகள் தான் காரணம். என் உயிர்க்கும் ஆபத்து இருக்குது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை என்று ஹேமநாத் கூறியிருக்கிறார்.

இப்படி இவர் கூறியதை அடுத்து பலரும் பல்வேறு கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் கூட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விசாரணை நடத்துங்கள்.

எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்று பேட்டி அளித்து இருந்தார். இந்த நிலையில் சித்ரா இறப்பதற்கு முன் நடந்ததை முதன்முறையாக பேட்டியில் ஹேம்நாத் கூறியிருக்கிறார்.  

அதில் அவர் கூறியிருப்பது, அன்று இரவு சூட்டிங் முடிந்து விட்டு ஒன்றரை மணி அளவில் சித்ரா ஹோட்டலுக்கு வந்திருந்தார்.

வரும்போது அவர் பல குழப்பத்தில் தான் வந்தார். ஆனால், அவர் ஹோட்டலுக்கு வருவதற்கு முன் என்னிடம் போனில் நன்றாக தான் பேசி, ஐ லவ் யூ மெசேஜ் எல்லாம் பண்ணி இருந்தார்.

எப்போதும் அவர் என்னை கட்டிப்பிடித்து பேசுவார்.

ஆனால், அன்று அவர் பிரச்சனையில் இருந்தார். இவருக்கு ஏற்கனவே தனிப்பட்ட பிரச்சனைகள், பணப்பிரச்சினை இருப்பது தெரியும். அதனால் நானும் அவர் மனதை புண்படுத்த விரும்பவில்லை என்று அமைதியாகிவிட்டேன்.

மேலும், அவர் பால்கனியில் ரோட்டை பார்த்துக் கொண்டு நின்று எதையோ யோசித்துக் கொண்டிருந்தார்.

நான் கூப்பிட்டும் அவர் அதை காதில் வாங்கவில்லை. எப்போதுமே நைட் சூட்லிருந்து வந்தால் குளித்து விடுவார். அதனால் அவர் குளிக்க சென்று இருந்தார். நான் வெளியே உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

15 நிமிடங்களுக்கு மேலாகியும் அவர் வரவில்லை. என்ன ஆச்சு? என்று நான் கதவை தட்டினேன் திறக்கவில்லை.

முனங்கல் சத்தம் மட்டும் கேட்டது. ஒரு வேளை சித்ரா அழுது கொண்டு இருக்கிறாளோ? என்று நான் நினைத்தேன். பிறகு உள்ளே போய் பார்த்தால் தூக்கில் தொங்கி இருந்தாள்.

நான் அப்படியே உறைந்து போய் விட்டேன். அதோடு சும்மா தான் இவள் விளையாடுகிறார் என்று நினைத்து கயிற்றை கழட்டினேன்.

முதல் உதவி செய்தேன். ஆனால், காப்பாற்ற முடியவில்லை என்று கூறியிருந்தார்.