ஒலி பெருக்கிகள் மூலம் மத வழிபாடு : மன்னாரில் எழுந்துள்ள புது பிரச்சினை

ஒலி பெருக்கிகள் மூலம் மத வழிபாடு : மன்னாரில் எழுந்துள்ள புது பிரச்சினை

மன்னார் மாவட்டத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது மக்கள் மத ஸ்தலங்களுக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக ஒவ்வொரு மத தலைவர்களும் தங்கள் மதத்தை சார்ந்த மக்கள் ஆன்மீக ரீதியான விடயங்களை அறிந்து கொள்வதற்காகவும் வீடுகளில் இருந்து பூஜைகள் மற்றும் மத வழிபாடுகளை கேட்பதற்கும் முகநூல் ஊடாக மத வழிபாடுகளை ஒளிபரப்பு செய்து வருகின்றனர்

இன்னும் சில கிராமங்களில் பொது இடங்களில் எந்த அனுமதியும் இன்றி ஒலி பெருக்கிகளை அமைத்து சத்தமாக மத வழிபாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.

குறிப்பாக குறித்த மத வழிபாடுகள் அதிகாலையிலும் மாலை நேரங்களிலும் அதிக சத்தமாக ஒலிபரப்படுவதனால் மதம் சார்ந்த மக்கள் ஆன்மீக ரீதியில் நன்மை அடைந்தாலும் நோயால் பீடிக்கப்பட்டு வீடுகளில் ஓய்வில் இருக்கும் நோயாளர்கள் மற்றும் கற்பிணி பெண்கள் சிறு குழந்தைகள் இருக்கும் குடும்பங்களும் தொடர்சியாக. பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் சில இடங்களில் மாற்று மதத்தவர்கள் வசிக்கும் இடங்களின் வேறு மதத்தவர்களின் பூஜை வழிபாடுகள் சத்தமாக ஒலிபரப்பப்பட்டு வருகின்றது இதனால் மத ரீதியான முரண்பாடுகள் தோற்றம் பெறுவதற்கான வாய்புகளும் அதிகமாக காணப்படுகின்றது.