சாய் பிரசாந்தின் மர்மான தற்கொலைக்கு காரணம் இதுதான் - ரகசியத்தை உடைக்கும் சீரியல் நடிகை!

சாய் பிரசாந்தின் மர்மான தற்கொலைக்கு காரணம் இதுதான் - ரகசியத்தை உடைக்கும் சீரியல் நடிகை!

சீரியல் தொகுப்பாளராக அறிமுகமாகி, பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து, பிறகு வெள்ளித்திரையிலும் நடிக்க தொடங்கியவர் சாய்பிரசாந்த்.

இவர், பல படங்களிலும் நடித்துள்ளார். வடகறி, நேரம், போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டில் தற்கொலை செய்துகொண்டார் சாய் பிரசாந்த். இவர் மறைந்து 7 வருடங்கள் கழிந்த நிலையில், தற்போது இது குறித்து பேசியுள்ளார் சீரியல் நடிகை தேவி கிருபா.

ஒரு நேர்காணலில் பேசிய இவர், சாய் பிரசாந்த் ரொம்பவே போல்டான நபர். சாப்பாடு இல்லாமலும், பணம் இல்லாமலும் இருந்தது தான் அவர் இறந்ததற்கு காரணம்.

மனைவியுடன் பிரச்சினை சம்பள பிரச்சினையால் தான் இறந்ததாக கடிதத்தில் எழுதி வைத்திருந்தான் என நினைக்கிறேன். பண ரீதியாக இந்த துறையில் எந்த பிரச்சனையும் நான் எதிர்கொள்ளவில்லை.

அதுக்கு நான் ஒர்க் பண்ண எல்லா இயக்குனர்களுக்கும் நன்றி சொல்லியே ஆகணும். மேலும், எனக்கு என்ன பிரச்சனை என்று எல்லோருக்கும் தெரியும்.

என் அம்மா என் மீது கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார்கள். என் வாழ்க்கையில் நடந்த பல பிரச்சனைகளுக்கு என் அம்மா தான் காரணமே தவிர இந்தத் துறையும் மத்தவங்களும் காரணம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.