ஜெயம் ரவிக்கு திடீர் உடல்நலக்குறைவு...படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்!

ஜெயம் ரவிக்கு திடீர் உடல்நலக்குறைவு...படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்!

பிரபல நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகர் ஜெயம் ரவி ' ஜன கண மன ' பட இயக்குனர் அகமதுவுடன் இணைந்து பணியாற்றுகிறார் .

இந்நிலையில் , அகமது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த ஜெயம் ரவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

பின்னர் சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதோடு படப்பிடிப்பும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.