மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு

மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு

திருகோணமலை- புல்மோட்டை பிரதேசத்தில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (15) மாலை இடம்பெற்றுள்ளது.

புல்மோட்டை - கரையாவெளி ஆற்றிற்கு இறால் பிடிப்பதற்காகச் சென்றபோதே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதில் புல்மோட்டை நாலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 70 வயதுடையவரும், புல்மோட்டை ஹமாஸ் நகரைச் சேர்ந்த 35 வயதுடைய இருவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.