யாழில் புத்தாண்டு கொண்டாட்ட பொருட் கொள்வனவில் ஆர்வம் காட்டாத மக்கள் (Photos)

யாழில் புத்தாண்டு கொண்டாட்ட பொருட் கொள்வனவில் ஆர்வம் காட்டாத மக்கள் (Photos)

யாழில் இம்முறை தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பொருட் கொள்வனவில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

வழமையாக சித்திரை வருடப் புத்தாண்டுக்கு முதல் நாள் யாழ். நகரப்பகுதியில் பெருந்திரளான மக்கள் தமக்கு தேவையான உடுபுடைவைகள், நகை மற்றும் ஏனைய பொருட்களைக் கொள்வனவு செய்வார்கள்.

இம்முறை, நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவுவதன் காரணமாகவும் ஆடம்பர பொருட்கள் உடு புடவைகளின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான பொருட் கொள்வனவில் ஆர்வம் காட்டவில்லை என கூறியுள்ளார்.

Gallery Gallery Gallery