யாழில் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சிறுவன்! லொறி மீது தாக்குதல் நடத்திய மக்கள்

யாழில் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சிறுவன்! லொறி மீது தாக்குதல் நடத்திய மக்கள்

யாழ்ப்பாணம், சத்திர சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார். 

தாயொருவர், மகனுடன் பயணித்த மோட்டார்சைக்கிள் மீது லொறியொன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது. 

இதன்போது லொறியின் சில் சிறுவனின் தலையில் ஏறிய நிலையில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அங்கு ஒன்று கூடியவர்கள் லொறியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.