பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் ஜூலி வெளியிட்ட முதல் பதிவு! உருகும் ரசிகர்கள்

பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் ஜூலி வெளியிட்ட முதல் பதிவு! உருகும் ரசிகர்கள்

இறுதி போட்டியில் நிச்சயம் பங்கேற்பார் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜூலி, இன்ஸ்டாவில் மிக உருக்கமான பதிவொன்றை எழுதியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு பிறகு ஓடிடியில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது.

60 நாட்கள் என தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 67 நாட்களைக் கடந்துள்ளது.

14 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த ஷோவில் இப்போது டாப் 4 போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்கான ரேஸில் உள்ளனர்.

வைல்டு கார்டு என்டிரியாக வந்த ரம்யா பாண்டியன், நிரூப், பாலா மற்றும் தாமரை ஆகியோர் பைனல் ரேஸில் உள்ளனர்.

சிறப்பாக விளையாடி இறுதிவரை வந்த அபிராமி மற்றும் ஜூலி ஆகியோர் கடந்த சில நாட்களில் இரவு நேர எலிமினேஷனில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

பிக்பாஸ் முதல் சீசன் முடிந்ததும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த ஜூலிக்கு இந்த சீசனில் ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர்.

ஜூலி வெளியேறியதை பொறுத்துக்கொள்ள முடியாத அவரது ரசிகர்கள், ஜூலி கண்டிப்பாக இறுதி மேடையில் நிற்க தகுதியானவர்" என தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு காரணம் இந்த சீசனில் அவர் தன்னுடைய முழு அர்ப்பணிப்பையும், தன் பக்கம் இருக்கும் நியாயத்தையும் கவனமாக எடுத்து வைத்தது தான்.

ஒவ்வொரு வாரமும் எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டாலும், ரசிகர்களால் காப்பாற்றப்பட்டு வந்தார் ஜூலி.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் வெற்றி குறித்து மிக உருக்கமாக பதிவிட்டுள்ளார்.