நேற்றைய தினம் மாத்திரம் 1243 PCR பரிசோதனைகள்..

நேற்றைய தினம் மாத்திரம் 1243 PCR பரிசோதனைகள்..

கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணும் PCR பரிசோதனைகள் தற்போது 75 239 வரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் 1243 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 814 பேராக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக  912 பேர் வரையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 891 பேராக பதிவாகியுள்ளது. கொரோனா தொற்றினால் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.