எதிர்வரும் வாரத்தில் மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

எதிர்வரும் வாரத்தில் மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

எதிர்வரும் வாரத்தில் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு  காலை 8.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதியினுள் 1 மணித்தியாலமும், மாலை 5.30 மணி முதல் இரவு 10.45 மணி வரை 45 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு  காலை 10.45 மணிமுதல் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களும் 45 நிமிடங்களும், மாலை 5.30 மணி முதல் இரவு 10.45 மணி வரை 45 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், 13,14 மற்றும் 15ஆம் திகதிகளில் நாட்டில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க அறிவித்துள்ளார்.

எனினும், 16 மற்றும் 17ஆம் திகதிகளில் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள்  2 மணித்தியாலங்களும், 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.